முகாம்களில் தமிழ்ப் பெண்கள் பலாத்காரம்!
வன்னி: இடம் பெயர்ந்து வந்தோருக்கான முகாம்களில் தங்கியுள்ள தமிழ்ப் பெண்கள் மிகக் கொடூரமாக பல்வேறு பாலியல் பலாத்காரங்களுக்கு உட்படுத்தப்படுவதாக ஸ்கை டிவி செய்தி கூறுகிறது.
இலங்கை அரசு இடம் பெயர்ந்தோருக்காக 40க்கும் மேற்பட்ட முகாம்களை அமைத்துள்ளது. இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கியுள்ளனர்.
இங்குள்ள தமிழ்ப் பெண்களை ராணுவத்தினர் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வருவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல இங்குள்ள இளைஞர்களையும் ராணுவத்தினர் தனித்துப் பிரித்து சித்திரவதைப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், முகாம்களில் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இளைஞர்கள் பலர் காணாமல் போகின்றனர். காணாமல் போகும் இளைஞர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
எங்களை ஆதரிக்கவும் தற்காப்புத் தருவதற்கும் யாருமே இல்லையென்று நாங்கள் வருத்தப்படுகிறோம். தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக உணர்கிறோம் என்று கண்ணீர் மல்க அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications