திமுகவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை-காங்
டெல்லி: திமுகவுடன் காங்கிரஸ் கட்சிக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. விரைவில் திமுக, மத்திய அமைச்சரவையில் சேரும் என மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே பிரச்சினை எதுவும் கிடையாது. இது வெறும் யூகமே.
திமுக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைகளை மேற்கொணடுள்ளது. விரைவில் அவர்கள் அமைச்சரவையில் சேருவார்கள் என நம்புகிறோம்.
2004ம் ஆண்டு மத்தியில் அமைச்சரவை அமைந்தபோது அமைச்சரைவயில் சேருவதற்கு திமுக 9 நாட்கள் எடுத்துக் கொண்டது.
தேர்தலுக்கு முன்பிருந்தே திமுக எங்களது கூட்டணிக் கட்சி. எனவே காங்கிரஸ் கட்சிக்கு அது மிகவும் முக்கியமான கட்சியாகும்.
பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. திமுக சார்பில் யார் அமைச்சராக வேண்டும் என்பது குறித்தெல்லாம் இன்னும் முடிவாகவில்லை. அந்தக் கட்டத்தை இன்னும் பேச்சுக்கள் அடையவில்லை என்றார் ஆசாத்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications