கார்த்திக் மீது தாக்குதல்-அதிமுக எம்எல்ஏவுக்கு ஜாமீன்
மானாமதுரை: உள்துறை அமைச்சரும், சிவகங்கை தொகுதி எம்.பியுமான ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கார் மீது தாக்குதல் நடத்திய வழக்கில், அ.தி. மு.க. எம்.எல்.ஏ. குணசேகரனுக்கு நீதி மன்றம் முன் ஜாமீன் வழங்கியது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும், அதிமுக சார்பில் ராஜகண்ணப்பனும் போட்டியிட்டனர்.
போட்டி கடுமையாக இருந்ததால் காங்கிரஸ் தரப்பு வாக்களார்களுக்கு பணம் சப்பளை செய்ததாக அதிமுக குற்றம் சாட்டியது.
இந்த நிலையில், கடந்த 12 -ம் தேதி இரவு, மானாமதுரை அருகே ராஜகம்பீரம் என்ற இடத்தில் வாக்காளர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் பணம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகின்றது.
இதனால், கார்த்தி சிதம்பரத்தின் காரை அ.தி.மு.க. வினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
இதில், கார்த்தி சிதம்பரத்தின் கார் டிரைவர் சரவணன் காயமடைந்தார். மேலும் உடன் வந்த மூன்று கார்கள் சேதமடைந்தன. அப்போது, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், அதிமுக எம்எல்ஏ குணசேகரன், முன்னாள் எம்.பி, அன்பழகன், ஊராட்சி தலைவர் தனபாண்டி உள்ளிட்ட 17 பேர் மீது கொலை முயற்சி உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், அ.தி.மு.க. வக்கீல் பிரிவு துணை செயலாளர் குருமுருகானந்தம், மற்றும் 11 பேரை மானாமதுரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்ட அதிமுகவினர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் மனு செய்தனர்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சோலைமலை அனைவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி அதிமுக எம்எல்ஏ குணசேகரன் உள்ளிட்டவர்கள் சிவகங்கை நகர காவல் நிலையத்தில் மூன்று வாரங்களுக் கையெழுத்திட வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
-
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications