எஸ்எஸ்எல்சி முடிவு வெளியானது: 81.6% தேர்ச்சி-தக்கலை மாணவர் முதலிடம்
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியாகின. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ஜோஸ் ரிஜன் முதலிடம் பெற்றுள்ளார். இந்த ஆண்டு 81.6 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மொத்த மாணவ, மாணவியர் தேர்ச்சி விகிதம் 81.76 சதவீதம் ஆகும். வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் 84.4 சதவீதமும், மாணவர்கள் 78.8 சதவீதமும் தேர்வு பெற்றுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த புனித மேரி ஹோரட்டி மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜோஸ் 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
நூற்றுக்கு நூறு..
பல்வேறு பாடங்களில் எத்தனை பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர் என்ற பட்டியல்..
கணிதம் - 5112
அறிவியல் -1541
சமூக அறிவியல் - 368
முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியர்:
முதலிடம்
1. ஜோஸ் ரிஜான் - 496
2வது இடம்
1. ஹெப்சிபா பியூலா (495) - பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
2. ஜேம்ஸ் மார்ட்டின் - பாளையங்கோட்டை செயிண்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி.
3. எஸ்.சுஷ்மா,சாரதா மேல் நிலைப்பள்ளி, மொடச்சூர், கோபிச்செட்டிப்பாளையம்.
4. ஆர்.அபிநயா, குறிஞ்சி மேல் நிலைப்பள்ளி, காவேட்டிப்பட்டி, நாமக்கல்.
5. எஸ்.துளசிராஜ், புனித இசபெல் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, பட்டுக்கோட்டை.
3-வது இடம்
1. ஏ.ஆர்.பாலச்சந்திரன் (494), எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டை.
2. எஸ்.உமாநந்தினி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேடசந்தூர்.
3. ஆர்.விமல், பா.வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி, தலப்பட்டி, கரூர்.
தமிழில் 3 பேர் முதலிடம்
தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில், 99 மதிப்பெண்கள் எடுத்து 3 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.
1. சுவாதிகா, பாரதீய வித்யா பவன் மேல்நிலைப்பள்ளி, தலப்பட்டி, கரூர்.
2. கிருத்திகா, ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்.
3. ஷாலினி, அரசு பெண்கள் பள்ளி, பேளூர், சேலம்.
ஜூன் 15ம் தேதி மார்க் ஷீட்
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான மதிப்பெண் பட்டியல் ஜூன் 15ம் தேதியன்று வழங்கப்படும். அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் தட்ஸ்தமிழ் இணையதளத்தில் முடிவுகளைக் காண...
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications