சுடுகாடாக காட்சி அளிக்கும் போர் பாதித்த பாதுகாப்பு வளையப் பகுதிகள்
நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஹெலிகாப்டரில் சென்று போர் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்டார். பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்டு, தற்காலிகமாக மக்கள் குடியமர்த்தப்பட்ட பகுதிகள் அனைத்தும் ராணுவத் தாக்குதலில் சிதிலமாகிக் கிடக்கின்றன.
பான் கி மூனுடன், மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் ஜான் ஹோம்ஸும் உடன் சென்றார். ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற அவர்களுக்கு சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே ராணுவத்தினர் காட்டினர். ஆனால் அந்த இடங்களே உருக்குலைந்து போய்க் கிடப்பதைப் பார்த்தால், காட்டப்படாத பிற பகுதிகளில் மிகப் பெரிய மனிதப் பேரழிவு நடந்திருக்கும் என்பது தெரிகிறது.
கீழே ஒரு மனித நடமாட்டமும் இல்லை. ராணுவ வீரர்களின் நடமாட்டம் மட்டுமே இருக்கிறது. கூடாரங்கள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கின்றன. கருகிப் போன வாகனங்கள், மரங்கள் என சுடுகாடு போலக் காட்சியளிக்கிறது அந்தப் பிரதேசம். இதுதொடர்பாக மீடியாக்கள் எடுத்து வெளியிட்டுள்ள படங்கள், மிகப் பெரிய பேரழிவு நடந்திருப்பதை நிரூபிப்பதாக உள்ளன.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?













Click it and Unblock the Notifications