பிரபாகரன் மனைவி, குழந்தைகள் உயிருடன் இருக்கலாம் - இலங்கை திடீர் அறிவிப்பு
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் மற்றும் இளைய மகன் ஆகியோர் உயிருடன் இருக்கக் கூடும் என இலங்கை திடீரென தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு பிரபாகரனின் உடல் கிடைத்ததாக கூறப்பட்ட நந்திக் கடல் கழிமுகப் பகுதியில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டதாக இலங்கை ராணுவம் செய்தி வெளியிட்டது.
ஆனால் அது உண்மை இல்லை என்று அடுத்த நாளே ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறினார். நேற்று ராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் பிரபாகரனின் மனைவி, பொட்டு அம்மன் ஆகியோரது மரணம் உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருக்கலாம் என பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புக்கவெல்லா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பிரபாகரனின் மனைவி, அவரது மகள் மற்றும் இளைய மகன் ஆகியோரது உடல்கள் கிடைக்கவில்லை. அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என நம்புகிறேன்.
அதேசமயம், பிரபாகரன் உயிரிழந்ததில் சந்தேகம் இல்லை. அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டத் தேவைகள் ஏற்பட்டால் மரபணு பரிசோதனைகளை நடத்த அரசு தயாராக உள்ளது.
பிரபாகரனின் சடலம் எரிக்கப்பட்ட போதிலும் மரபணு பரிசோதனைக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications