சிறு தொழில் நிறுவனங்களுக்கு மின்வெட்டு ரத்து
சென்னை: நாளை முதல் தமிழகத்தில் சிறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழிலகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 20 சதவிகித மின்வெட்டு முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் எதிர்பார்த்ததை விட அதிக மின்சாரம் உற்பத்தியாகத் துவங்கி இருப்பதால், பற்றாக்குறையை காற்றாலை மின்சாரம் மூலம் சமாளிக்கும் நிலை வந்திருப்பதால் இந்த உத்தரவை முதல்வர் கருணாநிதி பிறப்பித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
கடந்த வாரம் நாளொன்றுக்கு சராசரியாக 30 மில்லியன் யூனிட்டாக இருந்த காற்றாலை மின்சாரம் இந்த வாரம் இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனால் பற்றாக்குறையாதக உள்ள 650 மில்லியன் யூனிட் மின்சாரத்தை உள்ளூரிலேயே பெற முடியும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் கடந்த சில மாதங்களாக அமலில் இருந்த 20 சதவிகித மின்வெட்டை ரத்து செய்வதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் காற்றாலை மூலம் அதிக மின்னுற்பத்தி நடக்கிறது. 70 சதவிகித காற்றாலைகள் தமிழகத்திலேயே அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications