மத்திய அமைச்சரவையில் பங்கேற்பு - இன்று முடிவு சொல்கிறது திமுக

மத்திய அமைச்சரவையில் சேருவது தொடர்பாக திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் தரப்பில் சற்று இறங்கி வந்தனர். இதையடுத்து நேற்று முழுவதும் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் முதல்வர் கருணாநிதி தனது இல்லத்தில் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் இறுதியில் அமைச்சரவையில் சேர முடிவெடுத்ததாக தெரிகிறது.
அதன்படி, மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவார்கள். கனிமொழிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும். அவருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாலு துணை சபாநாயகராக்கப்படலாம்...
மூத்தவரான டி.ஆர்.பாலுவுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடம் கிடைக்காது. அதற்குப் பதில் அவரை லோக்சபா துணை சபாநாயகராக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
3 இணை அமைச்சர் பொறுப்புகளில் இடம் பெறுபவர்களாக ஜெகத்ரட்சகன், ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் அறியப்படுகின்றனர்.
தயாநிதிக்கு ஐ.டி கிடையாது...?
மு.க.அழகிரிக்கு வேதி மற்றும் உரத்துறை வழங்கப்படலாம்.
தயாநிதி மாறனுக்கு முன்பு கூறப்பட்டதைப் போல தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை வழங்கப்படாது எனத் தெரிகிறது. மாறாக அவருக்கு ஜவுளித்துறை ஒதுக்கப்படலாம்.
ராஜா, மீண்டும் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆக்கப்படலாம்.
கனிமொழிக்கு மகளிர் நலம் மற்றும் சிறார் நலத்துறை இணை அமைச்சர் (தனி்ப் பொறுப்பு) கிடைக்கலாம்.
இன்று திமுகவின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
முன்பு டி.ஆர்.பாலு, ராஜா ஆகியோருக்கு கட்டாயம் அமைச்சர் பதவி கிடையாது என காங்கிரஸ் கண்டிஷன் போட்டு வந்தது.
ஆனால் தற்போது திமுக சார்பில் யாரை அமைச்சராக அறிவித்தாலும் அதை ஏற்கத் தயார் என காங்கிரஸ் கூறியுள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications