ஜெட் நீக்கிய ஊழியர்களுக்கு பணி நியமனம் தரும் ஏர் இந்தியா!
Subscribe to Oneindia Tamil

நஷ்டம் காரணமாக சமீபத்தில் பெருமளவு ஊழியர்களையும் விமானப் பணியாளர்களையும் வெளியேற்றியது ஜெட் ஏர்வேஸ்.
அதே நேரம் புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கிறது ஏர் இந்தியா. புதியவர்களை பயிற்சி கொடுத்து நியமனம் செய்வதைவிட, ஏற்கெனவே பணியில் அனுபவம் பெற்ற ஜெட் நிறுவன ஊழியர்களை நியமிப்பதால் செலவு குறையும் என ஏர் இந்தியா நிர்வாகக் குழு முடிவு செய்தது.
எத்தனை பணியாளர்களை இந்த முறையில் நியமிக்கப் போகிறோம் என்பதை இதுவரை ஏர் இந்தியா வெளியிடவில்லை.
புதிதாக விமான பணியாளர் ஒருவரை நியமித்தால் அவருக்கு குறைந்தது மூன்று மாதங்கள் பயிற்சி தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications