அய்லா புயலுக்கு மேற்கு வங்கத்தில் 23 பேர் பலி - கொல்கத்தா தப்பியது
கொல்கத்தா: மேற்கு வங்கத்தை நேற்று தாக்கிய அய்லா புயல் அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 23 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். புயல் தற்போது பலவீனமடைந்து விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்கத்தாவில் ஐந்து பேரும், ஹவுராவில் 3 பேரும், பன்குரா மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தற்போது கொல்கத்தாவுக்கு மேற்கே 50கிலோமீட்டர் தொலைவில் அய்லா புயல் நிலை கொண்டுள்ளது. அது படிப்படியாக பலவீனமடைந்து வருவதாகவும், மேலும் வலுவடைய வாய்ப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் இன்று காலை முதல் மழை இல்லை. இருப்பினும் காற்று வீசி வருகிறது. கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 1.10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இரவு அறிவித்தார்.
புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் புத்ததேவ், ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி ஆகியோர் இன்று பார்வையிடவுள்ளனர்.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications