நீரில்லை-கழிப்பிடமில்லை: கொடுமையான சூழலில் தவிக்கும் தமிழர்கள்

இலங்கை வடக்கு பகுதியில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் 29 முகாம்களில் அவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாம்களில் போதிய குடிநீரோ, கழிப்பிட வசதிகளோ, தண்ணீர் வசதியோ இல்லாமல் லட்சக்கணக்கான தமிழர்கள் மிகக் கொடுமையான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சிறிய குட்டைகளில் தேங்கியுள்ள நீரில் தான் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். மிக அசுத்தமான, சொல்ல முடியாத கஷ்டங்களுடன் மகா மட்டமான சூழ்நிலையில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்களுக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கோ மருந்து கூட தரப்படவில்லை.
இவர்களுக்கு போதிய குடிநீரோ, உணவோ கூட வழங்கப்படவில்லை. இதை நேரில் பார்த்து அதிர்ந்து போன பான் கி மூன், இவர்களுக்கு உதவ ஐ.நா. மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால், தொண்டு நிறுவனத்தினர் உள்ளே வந்தால் அங்கு இலங்கை ராணுவம் நடத்திய கொடுமைகள் உலகத்தின் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என்பதால் அதை இலங்கை அதிபர் ராஜபக்சே ஏற்க மறுத்துள்ளார்.
முகாம்களில் போதிய வசதிகள் உள்ளதாகக் கூறியுள்ள அவர் உதவிகளை அரசிடம் வழங்கலாம் என்றும், அதை அரசே தமிழர்களுக்கு வழங்கும் என்றும் கூறி வருகிறார்.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள இந்தத் தமிழர்கள் தப்பிச் செல்ல முடியாதபடி முகாம்களைச் சுற்றிலும் இரும்பு தடைகள் ஏற்படுத்தப்பட்டு 24 மணி நேர துப்பாக்கிய ஏந்திய ராணுவத்தினரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications