ஜூன் 12ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது
Subscribe to Oneindia Tamil

2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் கடந்த பிப்ரவரி 17ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன் பிறகு துறைரீதியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த விவாதம் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது தேர்தல் முடிந்துவிட்டதையடுத்து ஜூன் 12ம் தேதி சட்டசபை மீண்டும் கூடுகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் இடம் பிடிப்பது தொடர்பாக திமுக-காங்கிரஸ் இடையே மோதல் நடந்து முடிந்துள்ள நிலையில் சட்டசபைக் கூட்டத்தில் அனல் பறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications