மனைவி இறந்த துக்கம்-கணவன் தற்கொலை!
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவன் தற்கொலை கொலை செய்து கொண்டார்.
சத்தியமங்கலம் கொமராபாளையம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குஞ்சான் (எ) கருப்புச்சாமி (38). விவசாயக் கூலி வேலை செய்து வருபவர். இவரது மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
இதனால் கடந்த இரண்டு மாதங்களாக மனமுடைந்து காணப்பட்ட கருப்புசாமி விஷம் அருந்தி உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே இறந்தார்.
சிகிச்சைக்கு பணமில்லை..கணவர் தற்கொலை:
நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லி வஉசி நகரை சேர்ந்தவர் பழனி. இவர் நயினார்குளம் மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இசக்கிமுத்து.
இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டு ஆகிறது. தற்போது இசக்கிமுத்து 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். பழனி திருமணத்தின்போதே பலரிடம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.
அந்த கடனை அவர் இன்னும் அடைக்கவில்லை. இந் நிலையில் மனைவி கர்ப்பம் அடைந்ததும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பழனியிடம் பணம் இல்லை. பலரிடம் பணம் கேட்டும யாரும் தரவில்லை.
இதனால் 1 மாதமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தவித்துள்ளார். இதனால் மனம் உடைந்த பழனி விஷம் குடித்தார். உடனடியாக அவரை பாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications