ரயில்களில் ரூ. 20க்கு மாதாந்திர சீசன் டிக்கெட்-மம்தா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரூ. 500 மாத வருமானம் கொண்ட ஏழை தொழிலாளிகள் மற்றும் மாணவர்களுக்கு ரயிலில் ரூ. 20க்கு மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்ற மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சராக கொல்கத்தாவில் உள்ள கிழக்கு ரயில்வே மண்டல தலைமை அலுவலகத்தில் தனது பொறுப்பை ஏற்ற பின் நிருபர்களிடம் பேசிய அவர்,

உலக பொருளாதார பி்ன்னடைவு, பாதுகாப்பு சிக்கல்கள் போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மனித நோயத்துடன் ரயில்வே இலாகா புதுமைகளை நோக்கி அழைத்து செல்லப்படுகிறது. ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரயில்வே துறை செயல்படும்.

இந்தியாவில் மாதம் ரூ. 500 மட்டுமே சம்பாதிக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்கள், காய்-கறி வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், நிலம் இல்லாத கூலித்தொழிலாளர்கள் ஆகியோருக்கு ரயிலில் பயணம் செய்ய சலுகை அளிக்கப்படும்.

இவர்களுக்கு ரூ. 20க்கு மாதாந்திர சீசன் டிக்கெட் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாணவர்களுக்கும் இந்த சலுகை உண்டு. இதற்கான நெறிமுறை விவரங்கள் விரைவில் வகுக்கப்படும்.

இவர்களி ரயிலில் பயணம் செய்யும்போது அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்திட முயற்சிப்போம். வர்த்தக நலன்களுக்காக மனிதநேயத்தை யாரும் இழக்கக் கூடாது.

எனக்கு முன் ரயில்வே அமைச்சர் பதவி வகித்தவர்களை நான் மதிக்கிறேன். எனினும் அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை.

மேற்கு வங்காளத்தில் மக்கள் இடது சாரிகளுக்கு எதிராக தீர்ப்பளித்து இருக்கிறார்கள். அங்கு எங்களது போராட்டம் தொடரும் என்றார் மம்தா பானர்ஜி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+