நாளையுடன் முடிகிறது கத்திரி வெயில்!
சென்னை: கடந்த 4ம் தேதி துவங்கி தமிழக மக்களை வாட்டி வதைத்த கத்திரி வெயில் ஒரு வழியாக நாளையுடன் முடிவடைகிறது.
அக்னி நட்சத்திரம் கடந்த மே 4ல் துவங்கினாலும், சென்னையில் வெயிலின் உக்கிரம் ஏப்ரல் கடைசியில் இருந்தே அதிகம் காணப்பட்டது. மே மாத துவக்த்தில் 100 முதல் 105 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்த வெயில் 13ம் தேதி அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டு மக்களை வாட்டியது.
வேலூரில் அக்னி நட்சத்திரம் நேரத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறுவதை அறவே தவிர்த்துவிட்டனர். இங்கு ஏப்ரல் ஆரம்பத்திலே வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் எட்டிபிடித்து, மக்களை பல வகையான வெக்கை நோய்களுக்கு ஆளாக்கியது.
அங்கு ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து 20 நாட்கள் உஷ்ணம் 100 டிகிரி பாரன்ஹீட்டை விட்டு இறங்காமல் இருந்தது. அதிகபட்சமாக மே 12ம் தேதி வெப்பம் 111 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது.
இதே போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்தது. அதுவும் மே இரண்டாவது வாரத்தில் தமிழகம் முழுவதும் வெயிலின் அகோரம் அதிகமிருந்தது. மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், தர்மபுரி, சேலம், தஞ்சாவூர் என அனைத்து ஊர்களிலும் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
மே 4ம் தேதி துவங்கிய கத்திரி வெயில் 24 நாட்கள் நீடித்து நாளையுடன் முடிவடைகிறது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்!












Click it and Unblock the Notifications