உள்நாட்டு விமான சேவை: மேலும் 10% குறைக்கிறது ஜெட்!

தொடர் நஷ்டம் மற்றும் பயணிகள் வரத்து குறைவு காரணமாக சில மாதங்களுக்கு முன் 10 சதவிகித விமானங்களைக் குறைத்தது ஜெட்.
நிலைமையில் பெரிதாக முன்னேற்றமில்லாததால் இப்போது மீண்டும் 10 சதவிகித விமானங்களைக் குறைத்துள்ளது ஜெட். இந்த விமானங்கள் லாபம் தரும் வெளிநாட்டு வழித்தடங்களுக்கு திருப்பிவிடப்படும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும் உள்நாட்டு விமான சேவையில் இருக்ககைகள் குறைக்கப்பட்ட விமானங்களும், வெளிநாட்டு சேவைக்கு அதிக அளவு 'போயிங் 737' ரக விமானங்ககளும் பயன்படுத்தப்படும் என்றும் ஜெட் அறிவித்துள்ளது. மேலும் தற்போது உள்நாட்டுப் பயன்பாட்டில் உள்ள போயிங் ரக விமானங்களை, தங்களை குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஜெட் கனெக்ட்டுக்கு மாற்றிவிடவும் திட்டமிட்டுள்ளது ஜெட்.
இந்தப் பணிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் முடிந்துவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் நிறுவனத்திடம் 50 போயிங் 737 விமானங்கள் உள்ளன. இவற்றில் 40 விமானங்கள் உள்நாட்டு வழித்தடங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
கடந்த நிதியாண்டில் ஜெட் நிறுவனத்துக்கு ரூ.961.4 கோடி நஷ்டம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
