நாங்கள் வென்றால் மோசமான மிஷினா?-கருணாநிதி

அமைச்சர் கே.பி.பி.சாமியின் மகள் உதயாவின் திருமணம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:
கே.பி.பி.சாமி என்றாலே என்னிடத்தில் ஒரு தனி சலுகை உண்டு. அவருடைய தந்தை சுயமரியாதை இயக்கத்தில் தூய தொண்டராக இருந்தார்.
அடக்குமுறைக்கு அஞ்சாத குடும்பத்தைச் சேர்ந்த கே.பி.பி.சாமி மக்களிடம் அன்பும் ஆதரவும் பெற்று எம்எல்ஏ ஆகி, அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இவரது தந்தை தனது மகன் அமைச்சர் ஆவான் என்பதற்காக திமுகவில் உழைக்கவில்லை. மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் அனைவரும் விரும்பும் வாளை மீனாக, சமுதாய தொண்டராக விளங்குகிறார்.
அடுக்கடுக்காக வெற்றி பெற்றாலும், தோல்வி வந்தாலும் சமமாக மதிக்க வேண்டும். இன்று சிலர் வெற்றி பெற முடியாததற்கு என்ன காரணம் என்று தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரசாரம் செய்த கம்யூனிஸ்டுகள், நாங்கள் அதிக இடம் பிடித்து மத்தியில் ஆட்சிக்கு வந்தால் திமுக ஆட்சியை கலைப்போம் என்று பேசினார்கள்.
திமுக ஆட்சி முன்பு கலைக்கப்பட்ட போது, அதற்கு கண்டனம் தெரிவித்தவர் எனது நண்பர் மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் ஜோதிபாசு. பாரம்பரியமான அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் இன்று மேடைக்கு மேடை திமுக ஆட்சியை கலைப்போம் என்று பேசியதையும் நான் எண்ணிப் பார்த்தேன்.
இதை எல்லாம் மக்கள் புரிந்து கொண்டு நாங்கள் செய்த கடமைக்கு நன்றி உள்ளவர்கள் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார்கள். தோல்வி அடைந்தவர்கள் இதை எல்லாம் யோசிக்க வேண்டும்.
1991ல் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் முற்றாக மாய்க்கப்பட்டார். அவர் மறைந்த 10வது நாளில் நடந்த பொதுத் தேர்தலில் திமுகவுக்கு கிடைத்தது ஒரே ஒரு இடம். 234 தொகுதிகளில் துறைமுகத்தில் நான் மட்டும் வெற்றி பெற்றேன். அதற்காக ஓட்டு சீட்டையும், ஓட்டு பெட்டியையும், மிஷினையும் குறை சொல்லவில்லை.
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று அண்ணா சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டோம். சென்ற முறை அவர்கள் வெற்றி பெற்றபோது மிஷினில் கோளாறு இல்லை. இப்போது கோளாறா? ஜெயித்தால் நல்ல எந்திரம். தோற்றால் மோசமான மிஷினா?
நாங்கள் 28 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். அங்கு உங்கள் சின்னத்தில் ஓட்டு போட்டால் உதயசூரியன் சின்னத்தில் விழுகிறது. நீங்கள் வெற்றி பெற்ற 12 இடங்களில் மட்டும் உங்கள் கட்சி சின்னத்தில் ஓட்டு போட்டால் உங்கள் கட்சி சின்னத்திற்கு ஓட்டு விழுகிறதா?. சொல்லுபவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். பைத்தியக்காரத்தனமாக யோசிக்க கூடாது என்றார் கருணாநிதி.
-
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
எக்ஸ்பிரஸ் வேகம்.. 100% குதிரை பேரம்.. தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏக்கள்.. இன்பதுரை போட்ட பதிவு -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்!












Click it and Unblock the Notifications