6.7% வளர்ச்சியில் இந்தியப் பொருளாதாரம்
டெல்லி: இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட சற்று அதிகமாகவே இந்த ஆண்டு வளர்ச்சி பெற்றுள்ளது. புதிய அரசுக்கு இது பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
கடந்த நிதியாண்டில் 9 சதவிகித பொருளாதார வளர்ச்சியுடன் முதல் நிலையில் இருந்தது இந்தியா. இந்த வளர்ச்சியைப் பார்த்து பல வெளிநாடுகள் மிரண்டன என்பதுதான் உண்மை.
ஆனால் எதிர்பாராத விதமாக சர்வதேச பொருளாதார வீழ்ச்சியில் இந்தியாவும் சிக்குண்டுவிட, வேக வேக சரிவு ஏற்பட்டது பல துறைகளிலும்.
இதனால் 2009 மார்ச் 31-ம் தேதியுடன் முடியும் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6 சதவீதம் வரைதான் இருக்கும் என கணித்து வந்தனர் வல்லுநர்கள். ஆனால் கணிப்பை பொய்யாக்கும் விதத்தில் இன்னும் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது இந்தியப் பொருளாதாரம்.
கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்த நிதியாண்டில் 6.7 சதவிகித வளர்ச்சியை இந்தியப் பொருளாதாரம் பெற்றுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வரும் நிதியாண்டில் இந்த வளர்ச்சியை இரட்டை இலக்கத்துக்குக் கொண்டு செல்வதே நமது அரசின் இலக்கு. பொருளாதார வளர்ச்சியோடு சாமானிய மனிதர்களின் வாழ்க்கை நிலையையும் உடர்த்த வேண்டும். அதுதான் இனி நமது ஒரே லட்சியம், என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications