ஜூலை முதல் வாரத்தில் ரயில்வே பட்ஜெட்-மம்தா
டெல்லி: ஜூலை முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என ரயில்வேத் துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடக்கவிருந்த காரணத்தால் பிப்ரவரியில் இடைக்கால ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தேர்தல் முடிவடைந்து, அமைச்சர்கள் அனைவரும் பதவி பிரமாணம் எடுத்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து ரயில்வே பட்ஜெட் வரும் ஜூலை மாதம் தாக்கல் செய்யப்படும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ரயில்வேயை பொறுத்தவரை வர்த்தகம் மற்றும் மக்கள் சேவை இரண்டை பார்க்க வேண்டியுள்ளது. இரண்டுக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் சரியான விகிதத்தில் பட்ஜெட் தயார் செய்யப்படும். இது ஜூலை முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும்.
ரயில்வே துறை இந்தியாவுன் நாடி துடிப்பு. வருமானத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். அதே நேரத்தில் பயணிகளின் வசதி மற்றும் அவர்களின் பாதுகாப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ரயில்வே ஊழியர்களுக்கு 6வது சம்பள குழு பரிந்துரையை அமல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மம்தா.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications