கருணாநிதி பிறந்தநாள்-6,000 மின் ஊழியர்களுக்கு யோகம்
சென்னை: தமிழக முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி மின் வாரியத்தில் வேலை பார்த்து வரும் சுமார் 6 ஆயிரம் ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப்படும் என தெரிகிறது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொழிற் சங்கங்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
இந் நிலையில் கடந்த 2007ல் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் பயனாக மின்வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் மஸ்தூர் பணியாளர்கள் 2,500 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 6,000 பேர் என மொத்தம் 8,500 பேருக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என கூறப்பட்டது.
மேலும் புதிதாக தலா 6 ஆயிரம் தற்காலிக பணியாளர்களும், ஒப்பந்த பணியார்களும் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆண்டுதோறும் அவர்களுக்கு பணி உயர்வு அளிக்கப்படும் என கூறப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது 6000 தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 6000 தற்காலிக பணியாளர்கள் மஸ்தூராக பணி நிரந்தரம் பெற இருக்கின்றனர். இதற்கான அறிவிப்பை மின்வாரியம் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அன்று வெளியிடும் என தெரிகிறது.
இது தவிர்த்து மின்வாரியத்தில் காலியாக இருக்கும் 1,500 பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்கும் உத்தரவும் வெளியாகலாம். தொகுப்பு ஊதியமாக ரூ. 2,500 பெற்று வரும் 4 ஆயிரம் ஹெல்பர்களுக்கு அடுத்த 2 இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரமாகும் எனவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications