மலேசிய தமிழர்கள் ஜோக்கர்கள்: இலங்கை தூதர் திமிர்
கோலாலம்பூர்: ஈழத் தமிழர்களுக்காக போராட்டம் நடத்தும் மலேசியா வாழ் இந்திய வம்சாவளியினர் ஜோக்கர்கள் என கிண்டலடித்துள்ளார் மலேசியாவுக்கான இலங்கை தூதர் டாக்டர் ரனசிங்கே.
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்காகவும், இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்தும் பிரமாண்ட முருகன் கோவில் அமைந்துள்ள பட்டு குகை பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழர்கள் பெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
இதை கிண்டலடித்துள்ளார் ரனசிங்கே. இதுகுறித்து அவர் கூறுகையி்ல், பட்டு குகைப் பகுதியில் நடந்த போராட்டத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே சர்வதேச நிவாரணப் பணிக் குழுக்களை போர் பாதித்த பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்காமல் வைத்துள்ளது இலங்கை அரசு.
இந்த நிலையில் இது தெரியாமல் போராட்டம் நடத்தியவர்களை ஜோக்கர்கள் என்றுதான் கூற வேண்டும் என கிண்டலடித்துள்ளார் ரனசிங்கே.
உலகத் தமிழர் நிவாரணம் மற்றும் பல்வேறு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் பட்டு குகை போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கையில் போர்க் குற்றங்களை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் மீது உலக போர்க்குற்ற டிரிப்யூனலில் வழக்கு தொடர ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், போர் பாதித்த பகுதிகளுக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தனி ஈழம் அமைக்க வேண்டும். அது அமையும் வரை ஐ.நா. அமைதி காக்கும் படை அங்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications