தமிழக சட்டசபை ஜூன் 17ம் தேதி கூடுகிறது
சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜூன் மாதம் 17ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்த அறிவிப்பை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா வெளியிட்டுள்ளார்.
சட்டசபையின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 17ம் தேதி தொடங்கியது. அன்று பட்ஜெட் தாக்கலானது.
வழக்கமாக ஒன்றரை மாத காலம் வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும். ஆனால் இடையில் லோக்சபா தேர்தல் குறுக்கிட்டதால் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு வாரம் மட்டுமே நடந்தது. பிப்ரவரி 26ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்வுகளுக்காக சட்டசபை வருகிற 17ம் தேதி தொடங்குகிறது. இக்கூட்டத் தொடரில் 51 மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதமும், பதிலுரைகளும் இடம் பெறும். இக்கூட்டம் ஒரு மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாமக, மதிமுக, இடதுதாரிக் கூட்டணிக்கு பெரும் தோல்வி ஏற்பட்ட நிலையில், மு.க.ஸ்டாலின் துணை முதல்வராகியுள்ள நிலையில் கூட்டம் கூடுவதால் பரபரப்புக்கு பஞ்சமி்ருக்காது.
முதல்வர், நிதியமைச்சருக்கு அடுத்த நிலையில் ஸ்டாலின் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சட்டசபையிலும் அவரது இருக்கை இடம் மாறுகிறது.
தற்போது முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் அன்பழகன் ஆகியோருக்கு தனி இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மூன்றாவது இடத்தில் வழக்கமாக ஆற்காடு வீராசாமி அமர்ந்திருப்பார். அவருக்கு அடுத்த இடம் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இப்போது வீராசாமியின் இருக்கையில் ஸ்டாலின் அமருவார் எனத் தெரிகிறது. அவருக்கு அடுத்த இடத்தில் ஆற்காடு வீராசாமி அமரக் கூடும்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications