துணை முதல்வர் பதவி அல்ல, கூடுதல் பொறுப்பு: ஸ்டாலின்

துணை முதல்வராக நியமிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்கள் ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது, துணை முதல்வர் பதவியை கூடுதல் பதவியாக கருதுகிறீர்களா என்ற கேள்விக்கு, துணை முதல்வர் பதவியை நான் பதவியாக கருதவில்லை. கூடுதல் பொறுப்பாகவே கருதுகிறேன்.
நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிலும், மேயராக இருந்தபோதிலும், அமைச்சராக இருந்தபோதிலும், கட்சியில் துணைச் செயலாளராக இருந்தபோதிலும், பொருளாளராக இருந்தபோதிலும் அவற்றை நான் பதவியாக கருதவில்லை. அனைத்தையும் பொறுப்பாகவே கருதினேன்.
முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் அறிவுரைபடியும், ஆலோசனையின்பேரில்தான் செயல்பட்டு வந்துள்ளேன். இனிமேலும் அதை தான் செய்ய உள்ளேன்.
இந்தப் பதவியை சுமையாகவும் கருதவில்லை, சுகமாகவும் கருதவில்லை என்றார்.
துணை முதல்வராக பதவியேற்பது எப்போது என்ற கேள்விக்கு, நான் அமைச்சர் பொறுப்பில் ஏற்கனவே இருப்பதால், துணை முதல்வர் பொறுப்பு வகிக்க தனியாக பதவி ஏற்க தேவையில்லை.
ஏற்கனவே உள்ள திட்டங்களையும், புதிய திட்டங்களையும் செம்மைபடுத்தி சிறப்பாக நிறைவேற்றுவேன். ஏற்கனவே நான் இருந்த பொறுப்புகளில் பொறுப்புடன் இருந்து பொறுப்புகளை நிறைவேற்றியதுபோல, துணை முதல்வராக இருந்து பொறுப்புகளை பொறுப்பாக இருந்து பொறுப்போடு நிறைவேற்றுவேன் என்றார் ஸ்டாலின்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications