வேலை வாய்ப்பை உருவாக்கும் நிறுவனங்களுக்கு சலுகை-ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு அடிப்படையில் நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகைகள் வழங்கப்படும் என துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

இன்று துணை முதல்வர் ஸ்டாலின், தொழில்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது தொழில் துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டன. இக்கூட்டத்தின் முடிவில் அவர் கீழ்க்கண்ட முக்கிய ஆணைகளை பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் அமைக்க இருக்கும் நிறுவனங்களுக்கு அவர்கள் வழங்கும் வேலைவாய்ப்பின் அடிப்படையில் தொகுப்புச்சலுகைகள் வழங்கக் கோரும் குறிப்பினை அவர் ஏற்றுள்ளார்.

இதுவரை பொறுப்பேற்கப்பட்ட முதலீட்டின் அடிப்படையில்தான் தொகுப்புச்சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தற்போது ஒரு முன்னோடி முயற்சியாக, வேலை வாய்ப்பின் அடிப்படையில் தொகுப்பு சலுகைகளை வழங்க இந்த புதிய கொள்கை வகை செய்கிறது. இதனால் தமிழகத்தில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

மேலும் போர்டு இந்தியா நிறுவனம், செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாட்டாளர் நிறுவனம், செயிண்ட் கோபேன், டெல்பி டி.வி.எஸ். மற்றும் கங்கோத்ரி டெக்ஸ்டைல்ஸ் ஆகிய ஐந்து முதலீட்டு திட்டங்களுக்கு அமைப்பு முறையிலான தொகுப்பு சலுகைகள் வழங்கும் செயற்குறிப்புகளுக்கு அவர் இன்று ஒப்புதல் அளித்தார்.

17 ஆயிரம் புதிய வேலைகள்...

இந்த ஐந்து திட்டங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ. 2 ஆயிரத்து 450 கோடி முதலீடு செய்யப்படுவதுடன் சுமார் 17 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பும் உருவாக்கப்படும்.

தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் மற்றும் பெரம்பலூர் சர்க்கரை ஆலை ஆகிய வற்றுக்கான புனரமைப்புத் திட்டத்தை செயல்படுத்தும் செயற்குறிப்பும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதற்கும் துணை முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டத்தின் மொத்த புனரமைப்பு செலவு ரூ. 408 கோடியாகும் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+