துணை முதல்வர் - ஸ்டாலினுக்கு பாமக, பாஜக, கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும், பாஜக தலைவர்களும், திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் முதல் துணை முதல்வராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து நேற்று திமுகவை சேர்ந்த மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தி தெரிவித்தனர்.

தொலைபேசியில் வாழ்த்திய அன்புமணி...

அதேபோல எதிர் முகாமில் உள்ள பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பாஜக தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்டு தலைவர் சிவபுண்ணியம் ஆகியோர் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தன.

அதேபோல, மத்திய அமைச்சர் பழனி மாணிக்கம், துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, அமைச்சர்கள் சுப தங்கவேலன், கோ சி மணி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், சுரேஷ்ராஜன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, மைதீன்கான், கீதா ஜீவன் ஆகியோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருமா வாழ்த்து...

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பகுஜன்சமாஜ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்து பொன்னாடை போர்த்தினார். அவருடன் மதுராந்தகம் எம்எல்ஏ காயத்திரிதேவியும் சென்றிருந்தார்.

இவர்களை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஸ்டாலினுக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். அவருடன் காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம், காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம் ஆகியோர் சென்றிருந்தனர்.

நடிகர் பிரபு, விஜய்...

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நடிகர் ராதாரவி, இயக்குனர் கே.பாலசந்தர் ஆகியோர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

நடிகர் பிரபு, விஜய் ஆகியோர் அவருக்கு தொலைபேசியில் தங்களது வாழத்துக்களை தெரிவித்து கொண்டனர்.

இவர்களை தவிர்தது மத்திய அமைச்சர் வயலார் ரவி, வாழப்பாடியார் பேரவை மாநில அமைப்பாளர் கோவிந்தராஜூ, தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, ஆகியோரும் வாழ்த்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+