சேது சமுத்திரத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் - வாசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சேது சமுத்திரத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரான பின்னர் இன்று வாசன் முதல் முறையாக சென்னைக்கு வந்தார். பின்னர் அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழர்களின் கனவு திட்டமாக சேது சமுத்திர திட்டம் உள்ளது. இந்திய மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் திட்டமாகவும், மக்களின் எண்ணங்களை பிரதி பலிக்கும் திட்டமாகவும் உள்ளது. எனவே கண்டிப்பாக இந்த திட்டம் நிறை வேற்றப்படும்.
இத் திட்டத்தை நிறை வேற்ற தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஒத்த கருத்துடன் இருக்கிறோம். அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
அதேபோல குளச்சல் உள்பட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறை முகங்களும் மேம்படுத்தப் படும் என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications