நாடாளுமன்ற பாஜக தலைவராக அத்வானி தேர்வு
டெல்லி: நாடாளுமன்ற பாஜக தலைவராக எல்.கே.அத்வானி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டெல்லியில், நேற்று மக்களவை பாஜக கட்சிக் கூட்டம் நடந்தது. இதில் அத்வானி மக்களவை பாஜக தலைவராக (எதிர்க்கட்சித் தலைவராக) தேர்ந்தெடுக்ப்பட்டார்.
ஆரம்பத்தில் இந்தப் பதவியை ஏற்க விரும்பவில்லை என்று கூறி வந்தார் அத்வானி. இருப்பினும் கட்சித் தலைவர்களின் வலியுறுத்தலைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
இருப்பினும் கூட இந்தப் பதவியில் அவர் குறுகிய காலம் மட்டுமே இருப்பார் எனத் தெரிகிறது. அதன் பின்னர் ஜஸ்வந்த் சிங், சுஷ்மா சுவராஜ் போன்ற தலைவர்களில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
நேற்று நடந்த எம்.பிக்கள் கூட்டத்தில் அத்வானி பேசுகையில், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், ஒரிசா போன்ற வட மாநிலங்களில் நமது கட்சி மோசமாக தோல்வி அடைந்தது ஏன் என்பதை கண்டறிய வேண்டும். அத்துடன் குஜராத், மத்திய பிரதேசம், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி பெறாததற்கான காரணத்தையும் ஆராய வேண்டும்.
பா.ஜ.கவின் ஆதரவு தளம் விரிவடைந்து இருப்பதால், அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று நாம் எதிர்பார்த்தது தவறு அல்ல. ஆனால், மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும் என்றார் அத்வானி.
பா.ஜ.க சார்பில் இரு சபைகளின் துணைத் தலைவர்கள் மற்றும் மேல் சபை தலைவரை தேர்ந்து எடுக்க கூட்டத்தில் அத்வானிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications