நாடாளுமன்றம் கூடியது: திமுக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு-மீரா குமார் சபாநாயகராகிறார்
டெல்லி: 15வது லோக்சபா இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் புதிய எம்.பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் மாணிக் ராவ் காவிட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் திமுகவைச் சேர்ந்த எம்பிக்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
புதன்கிழமை புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறும். மீரா குமார் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்படுகிறார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15வது லோக்சபா தனது செயல்பாட்டைத் தொடங்குகிறது. இன்றும் நாளையும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தற்காலிக சபாநாயகர் கேவிட்டுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க பாசுதேவ் ஆச்சார்யா (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), அர்ஜூன் சரண் சேத்தி (பிஜூ ஜனதா தளம்), பைரன் சிங் எங்க்டி (காங்கிரஸ்), சுமித்ரா மகாஜன் (பாஜக) ஆகிய 4 மூத்த எம்.பி.க்கள் குழுவை நியமித்துள்ளார்.
முதலில் அவை முன்னவரான பிரணாப் முகர்ஜியும், அடுத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
பின்னர் மற்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்து வருகின்றனர். அழகிரி, ராஜா உட்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
அனைத்து உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் எடுத்த பின் 3ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடைபெறும். சபாநாயகராக மீரா குமார் நிறுத்தப்படுகிறார். ஒருமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த தலித் தலைவர் பாபு ஜெகஜீவன் ராமின் மகள்தான் மீரா குமார். மத்திய அமைச்சராக இருந்து வரும் அவர் சபாநாயகர் பதவிக்கு நிறுத்தப்படுகிறார். இதையடுத்து நேற்று சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார் மீரா. அதன் பின்னர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
தலித் பெண்மணி ஒருவர் சபாநாயகர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். மேலும் பெண் ஒருவர் இப்பதவியில் அமருவதும் இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 4ம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டம் சென்ட்ரல் ஹாலில் நடைபெறும். அதில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தி புதிய அரசின் திட்டங்களை அறிவிப்பார்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications