தமிழகத்தில் 77 எஸ்.ஐகளுக்கு பதவி உயர்வு
நெல்லை: தமிழகத்தில் பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் முடிந்த 77 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1997ம் ஆண்டு 250 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் சேர்ந்தனர். பி்ன்னர் அவர்கள் பல்வேறு இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டனர். தற்போது பணியில் சேர்ந்து சுமார் 12 ஆண்டுகள் முடிந்த நிலையில் அவர்களில் 56 பேருக்கு கடந்த 2008ம் ஆண்டு பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
மேலும் பணி காலத்தில் தண்டனை பெற்ற 10 பேருக்கு பதவி நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள 184 பேருக்கு கடந்த பிப்ரவரி 13ம் தேதி இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கும் நோக்கில் பட்டியல் தயாரிக்கப்பட்டு டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் முதல் கட்டமாக 77 சப்-இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு நேற்று முன்தினம் பிறபிக்கப்பட்டது.
இதில் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நெல்லை மாநகரத்தில டவுண் போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ஆகிய இருவர் மட்டும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா, துணை கமிஷனர் ஜெயசந்திரன் ஆகியோர் இன்ஸ்பெக்டர் குருநாதனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications