நெல்லையில் அரிவாளை காட்டி ஏட்டு பைக் 'லபக்'!
நெல்லை: நெல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டை அரிவாளால் மிரட்டி மர்ம கும்பல் ஒன்று அவரது பைக்கை கொள்ளையடித்து சென்றது.
பாளை டிவிஎஸ் நகர் பகுதியில் பெருமாள்புரம் குற்றபிரிவு ஏட்டுகள் ஜெயக்குமார், சுதாகர் ஆகியோர் நேற்று இரவு 7 மணியளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு 3 வாலிபர்கள் ஒரு பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தனர். பைக்கின் பதிவு எண் மதுரை மாவட்டத்தை சேர்ந்ததாக இருந்ததால் சந்தேகமடைந்த ஏட்டுகள் இருவரும் அவர்களிடம் சென்று வண்டிக்கு உரிய ஆவணங்களை கேட்டனர். அப்போது அந்த வாலிபர்கள் திடீரென அரிவாளை காட்டி ஏட்டுகள் இருவரையும் மிரட்டினர்.
மேலும் அவர்கள் வைத்திருந்த பைக்கை போட்டு விட்டு ஏட்டு ஜெயக்குமார் பைக்கை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து போலீசார் தப்பி சென்றவர்கள் போட்டுவிட்டு போன பைக்கில் இருந்த கைரேகைகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடமே கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பதால், இவர்களை நம்பி எப்படி இரவு வெளியில் செல்வது என பொது மக்கள் அங்கலாயித்து கொள்கின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications