ஆம்புலன்ஸ் இல்லாத பரமக்குடி அரசு மருத்துவமனை
பரமக்குடி: பரமக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
பரமக்குடி அரசு மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லாததால் மேல் சிகிக்சைக்கு நோயாளிகளை மதுரை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதற்காக மருத்துவமனை துவக்கப்பட்ட சமயத்தில் அரசால் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தது.
அது தற்போது பயன்படுத்தும் தேதி காலவதியாகி பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இதையடுத்து அவசர சிகிக்சைக்கு முதுகுளத்தூர் அரசு மருத்துமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் ஒன்றை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த ஆம்புலன்சும் பழுதாகிவிட்டது. அதை சரி செய்ய மதுரை பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது என்றும் இரண்டு மாதங்கள் கடந்தும் அது சீரமைக்கப்பட்டு திரும்ப வரவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பரமக்குடி விபத்து மீட்புச் சங்கம், தமுமுக போன்ற சில நல்ல தொண்டு நிறுவனங்கள் விபத்து நடந்த இடங்களுக்குச் சென்று காயமுற்றவர்களை இலவசமாக உடனே ஏற்றிவந்து மருத்துவமனைகளில் சேர்க்கின்றனர். மேல் சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்வதற்கு டீசல் செலவுக்காக ரூ. 1,000 வாங்குகின்றனர்.
மக்களின் அவசிய தேவைகளை செய்ய வேண்டிய அரசு முக்கிய தேவையான உயிர்காக்கும் ஆம்புலன்ஸ் வசதிகளை செய்யாமல் இருந்து வருவதால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications