து.முதல்வர் ஸ்டாலினுக்கு 2 ஐஏஎஸ் செயலாளர்கள்
சென்னை: துணை முதல்வராக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு செயலாளர் மற்றும் துணைச் செயலாளராக இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக முதல்வருக்கு மட்டுமே ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளர்களாக நியமிக்கப்படுவது வழக்கம்.
ஆனால், தமிழகத்தில் முதல் முறையாக ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டு அவருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு உதவியாக இரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வருவாய்த் துறை முதன்மைச் செயலாளர் கே.தீனபந்து செயலாளராகவும், விருதுநகர் மாவட்டக் கலெக்டராக உள்ள கே.ரகுபதி, துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.
மேலும் இரு மாவட்ட கலெக்டர்களும் மாற்றப்பட்டுள்ளதாக ஸ்ரீபதி அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டராகவும், சிவகங்கையின் கலெக்டராக சிகி தோமஸ் வைத்தியனும் நியமிக்கப்பட்டு்ள்ளனர்.
எஸ்.வி.சேகர்-முரளி வாழ்த்து:
இந நிலையில் அதிமுக எம்எல்ஏவான எஸ்.வி.சேகர், ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து துணை முதல்வரானதற்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
அதே போல தேர்தலில் அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்த நடிகர் முரளியும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தினார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications