நாகர்கோவிலில் 3 கேரள மாணவர்களுக்கு வெட்டு
நாகர்கோவில்: நாகர்கோவிலுக்கு அருகே உள்ள தனியார் பொறியியல்ற் கல்லூரி மாணவர்களுக்கு இடைய ஏற்பட்ட மோதலில் மூன்று கேரளா மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில்,
நாகர்கோவிலுக்கு அருகே இறச்சகுளம் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான என்ஜினியரிங் கல்லூரி ஒன்று உள்ளது.
அந்த கல்லூரியில் திருவனந்தபுரத்துக்கு அருகில் இருக்கும் நெய்யாற்றங்கரையை சேர்ந்த தீபக், அணில் மற்றும் கோட்டயத்தை அஸ்வின் ஆகிய மூன்று பேரும் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கின்றனர். இவர்கள் அப்பகுதியில் தனி அறையெடுத்து அதில் தங்கி படித்து வருகின்றனர்.
இவர்களுக்கும் அதே கல்லூரியை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சுமார் 10 பேர் கொண்ட கும்பல் ஒன்று மூன்று கேரள மாணவர்கள் தங்கியிருக்கும் அறைக்கு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளது. பின்னர் அவர்கள் மீது சராமரியாக தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்து ஓடியது.
வெட்டு காயமடைந்த அந்த மூன்று மாணவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையி்ல சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் லேசான பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications