ஆஸியில் மேலும் ஒரு இந்தியர் மீது தாக்குதல்

குடிபோதையில் இருந்த ஆஸ்திரேலியர் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டார்.
மெல்போர்ன் நகரின் சேப்பல் தெருவிலிருந்து குடிபோதையில் ஒரு ஆஸ்திரேலியரை தனது டாக்சியில் ஏற்றிக் கொண்டு சவாரி கிளம்பினார் 35 வயதாகும் அந்த இந்திய டிரைவர். பிளாக்பர்ன் என்ற இடத்திற்கு டாக்சி போய்க் கொண்டிருந்தபோது, இந்திய டிரைவரை தாக்கியுள்ளார் அந்த ஆஸ்திரேலிய குடிகாரர்.
இதுகுறித்து அந்த டாக்சி டிரைவர் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. பிளாக்பர்ன் பகுதியைச் சென்றடைந்ததும், அந்த நபர் தன்னை ரிங்வுட் என்ற இடத்திற்கு செல்லுமாறு பணித்தார். அப்போது எனது டாக்சி டயர் பங்சர் ஆகி விட்டது.
அவரிடம் இதை சொல்ல முயன்றபோது, என்னை தாறுமாறாக திட்டியபடி அடித்தார் அந்த ஆஸ்திரேலியர். முகத்தில் சரமாரியாக குத்தினார்.
இந்த தாக்குதலில் எனது முகம், கால், கைகளில் காயம் ஏற்பட்டு விட்டது. இரண்டு பற்களும் உடைந்து விட்டன. இந்த சம்பவத்திற்குப் பின்னர் மயக்கமடைந்து விட்டேன்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் என்னை மீட்டனர். எனது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்தனர். ஆல்பிரட் மருத்துவமனைக்கு என்னை கொண்டு சென்றனர். இன்று காலைதான் நான் வீடு திரும்பினேன் என்றார்.
இந்திய டாக்சி டிரைவரைத் தாக்கிய குடிகார ஆஸ்திரேலியரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் இது இனவெறி தாக்குதல் போலத் தெரியவில்லை என்று பாதிக்கப்பட்ட இந்திய டிரைவர் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications