'ராமர்': கருணாநிதி மீதான வழக்கு பெங்களூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக தமிழக முதல்வர் கருணாநிதி மீது போடப்பட்ட வழக்கை பெங்களூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுவதால் ராமர் பாலம் இடிக்கப்படும் என்பதால் அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சில அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன.

அப்போது தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி ராமர் ஒரு கற்பனை பாத்திரம் என்றும் ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது கிடையாது எனவும் கூறினார். இதையடுத்து அவர்கள் கோடிகணக்கான மக்களின் நம்பிக்கையை அவமானப்படுத்தி விட்டதாக பெங்களூர் நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் கருணாநிதியின் பேச்சு குறித்து விசாரணை செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு பெங்களூர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் பைரா ரெட்டி, கருணாநிதி கருத்து குறி்த்து மேலும் எதுவும் விசாரிக்க தேவையில்லை. இந்த வழக்கு இதோடு முடிக்கப்படுகிறது என்றார்.

கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் உதய் ஹோலா கூறுகையில், பெங்களூர் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+