எம்.கே.நாராயணன் மீண்டும் பாதுகாப்பு ஆலோசகர்

Subscribe to Oneindia Tamil

MK Narayanan
டெல்லி: பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணனே நீடிக்கவுள்ளார். அதே போல பிரதமரின் முதன்மை செயலாளராக டி.கே.ஏ.நாயரும் பதவியில் தொடரவுள்ளார்.

இன்டலிஜென்ஸ் பீரோவின் முன்னாள் தலைவர் எம்.கே.நாராயணன் காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் வேண்டப்பட்டவர். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
அதே போல ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான டி.கே.ஏ.நாயர் பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரதமர் மன்மோகன் தனது பதவியை ராஜினாமா செய்போது இந்த இருவரும் முறைப்படி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஆனால், தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியே வென்றதையடுத்து இந்த இருவரையும் அந்தந்தப் பதவிகளிலேயே நீடிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இவர்களை மீண்டும் இந்தப் பணிகளில் அமர்த்தும் ஆணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த 2 வாரத்தில் ஓய்வு பெற உள்ள தற்போதைய அமைச்சரவை செயலாள கே.எம்.சந்திரசேகரின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு அரசு நீடித்தது. அதே போல பிரதமரின் சிறப்புத் தூதர் ஷியாம் சரணின் பதவிக் காலமும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+