இந்தியா வரும் யுஎஸ் வெளியுறவு இணையமைச்சர்
வாஷிங்டன்: இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் வரும் 10ம் தேதி இந்தியா வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அப்போது இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தும் விதமாக இருவரும் பேசி கொண்டதாகவும் அதன் விளைவாக தற்போது அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் இந்திய வருகிறார்.
வரும் 10ம் தேதி இந்தியா வரும் பர்ன்ஸ் 13ம் தேதி வரை இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவர் டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு செல்வார் எனவும், மூத்த அரசு அதிகாரிகளையும், சில தனியார் நிறுவனத்தின் தலைவர்களையும் சந்திப்பார் என தெரிகிறது.
மத்தியில் புதிய அரசு அமைந்த பின்னர் இந்தியா வரும் முதல் பெரிய வெளிநாட்டு அமைச்சர் இவர் தான் என்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் விவகாரம், மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக வெளியுறவு செயலர் சிவ சங்கர மேனனையும் சந்தித்து பேசுவார் எனவும் தெரிகிறது.
ஜூலையில் ஹிலாரி வருகை...
இவரை தொடர்ந்து வரும் ஜூலையி்ல் அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்தியாவுக்கு வருவார் என கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications