சபாநாயகரானார் மீரா குமார்-து.சபாநாயகர் கரியா முண்டா

15வது மக்களவையின் சபாநாயகியுள்ள மீரா குமார் காங்கிரஸ் சார்பில் 5 முறை எம்பியாக தேர்வானவர் ஆவார். நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர் என்ற சிறப்பையும் முதல் தலித் பெண் சபாநாயகர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
நேற்று மீரா குமார் பெயரை முன் மொழிந்தும் வழி மொழிந்தும் ஆளும் காங்கிரஸ், எதிர்க் கட்சியான பாஜக மற்றும் பலவேறு கட்சிகளின் சார்பில் 13 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மீரா குமார் இன்று போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாடாளுமன்ற செயலாளர் பி.டி.டி. ஆச்சாரி இன்று வெளியிட்டார்.
அதே போல துணை சபாநாயகராக கரியா முண்டாவும் தேர்வானதாக அறிவிக்கப்பட்டார்.
மீரா குமார், கரியமுண்டா இருவரும் இன்று தங்களது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு அனைத்துக் கட்சி எம்பி்க்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.
'சார்' என்று அழைத்த எம்.பிக்கள்..
பி்ன்னர் அவையை நடத்திய மீரா குமாரை பல எம்பிக்களும் பழக்கதோஷத்தில் சார் என்றே அழைத்தனர். பின்னர் ஒருவழியாக சமாளித்துக் கொண்டு மேடம் ஸ்பீக்கர் என்று மாற்றிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications