இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப இந்தியா திட்டம்?

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தற்போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாய் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு போதிய உணவு, நீர், கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில் அவர்கள் பெரும் கொடுமையான சூழலில் வசித்து வருகின்றனர்.
இது குறித்து ஐ.நா., ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்தாலும் இந்தியா மட்டும் கவலைப்படாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந் நிலையில் தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க இலங்கை அதிபர் ராஜக்சே டெல்லி வர திட்டமிட்டுள்ளார்.
ஆனால், முகாம்களில் நிலவும் மோசமான சூழ்நிலையை சரி செய்துவிட்டு வருமாறு அவரிடம் மத்திய அரசு கூறியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவரது வருகை தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் இடம்பெயர்ந்த தமிழர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும், அவர்களை வசிப்பிடங்களுக்கே திருப்பி அனுப்பவும் நடவடிக்கைகள் எடுக்க இலங்கையுடன் இணைந்து செயல்பட இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக விவாதிக்க சிறப்புத் தூதர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பி அந் நாட்டு அரசுடன் பேச்சு நடத்த மத்திய திட்டமிட்டுள்ளது.
மறுபடியும் நாராயணனையோ மேனனையோ அல்லது நம்பியார்களையோ அனுப்பாமல் தமிழர்கள் குறித்து உண்மையிலேயே கவலை கொண்ட யாரையாவது மத்திய அரசு அனுப்பும் என்று நம்புவோம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications