தமிழகத்தில் வாழும் அகதிகளை ஏற்போம்-இலங்கை
கொழும்பு: தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்கள் இலங்கை வந்தால், அவர்கள் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்கள் இலங்கை வருவதற்கு எந்த தடையும் இல்லை என இலங்கை செய்தித் துறை அமைச்சர் அனுரா பிரியதர்சனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
முதல் கட்டமாக வடக்கு பகுதி முகாம்களில் தங்கியிருக்கும் 2 லட்சத்து 72 ஆயிரம் தமிழர்களை நிரந்தமராக அவர்களது சொந்த வீட்டுக்கு திருப்பியனுப்ப திட்டமிட்டு்ள்ளோம்.
இதற்காக ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர் பசில் ராஜபக்சே தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை வேகமாக செய்து முடிக்கும்.
இன்னும் 6 மாதத்துக்குள் வடக்கில் இடம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சனைகள் முடிக்கப்படும்.
தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்கள் இலங்கை வந்தால், அவர்கள் மீண்டும் குடிமக்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்கள் வருவதற்கு எந்த தடையும் இல்லை. அவர்களும் எங்கள் நாட்டு மக்கள் தான். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம்.
வடக்கில் தமிழ் மக்களின் துயர துடைக்க இலங்கை அரசு 26 சமுதாய வளர்ச்சி மையங்களை அமைத்து வருகிறது. போதுமான டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கொண்ட 15 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் சுமார் 6,740 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications