பாஜகவிலிருந்து விலக திருநாவுக்கரசர் முடிவு?

மக்களவைத் தேர்தலில் சரத் குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக 12 இடங்களில் போட்டியிட்டது.
இதில் கன்னியாகுமரி, ராமநாதபுரம் தவிர மற்ற தொகுதிகளில் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.
இந்தப் படுதோல்வி குறித்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன், துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், அகில பாரத இணை அமைப்பு பொதுச் செயலாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஆனால், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அக் கட்சியின் ராஜ்யசபா எம்பியான திருநாவுக்கரசர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தார்.
இப்போது பாஜக மாநிலங்களவை எம்பியாக உள்ள திருநாவுக்கரசர் தேர்தல் தோல்விக்குப் பின் கட்சியின் எந்தத் தலைவர்களையும் சந்திக்கவும் இல்லை, அவர்களுடன் பேசவும் இல்லை.
இனியும் தமிழகத்தில் பாஜகவில் இருப்பது தனது அரசியல் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று அவர் கருதுவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் மிக விரைவிலேயே திருநாவுக்கரசர் பாஜகவில் இருந்து விலகுவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுகவின் பணபலமும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடத்தப்பட்ட முறைகேடுகளுமே பாஜகவின் மோசமான தோல்விக்குக் காரணம் என்று நிர்வாகிகள் கருத்து தெரிவித்ததோடு கூட்டம் முடிந்தது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications