பணவீக்கம் 0.48% ஆகக் குறைந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மே 23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்கத்தின் அளவு 0.13 சதவிகிதம் குறைந்துள்ளது.
அதற்கு முந்தைய வாரத்தில் மாற்றமில்லாமல் 0.61 சதவிகிதத்திலேயே இருந்த பணவீக்கம், இந்த வாரம் 0.48 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ஆனாலும் அத்யாவசியப் பொருட்களான பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் விலைகள் மட்டும் குறையவில்லை.
மொத்த விலைக் குறியீட்டெண்படி கடந்த ஆண்டு இதே காலத்தில் பணவீக்கம் 8.90 சதவிகிதமாக இருந்தது.
மைதா, மசாலாப் பொருட்கள் போன்றவற்றின் விலை இந்த வாரம் குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications