சிக்கலில் ரிலையன்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலம்!
டெல்லி: முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனம் உருவாக்கத் திட்டமிட்டிருந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான நில ஆர்ஜிதத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
மகாராஷ்ட்ராவின் ரெய்காட் பகுதியில் 'மும்பை சிறப்புப் பொருளாதார மண்டல'த்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தது ரிலையன்ஸ். ஆனால் இங்கு அதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது தொடர்பாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து அந்கப் பகுதி மக்களிடம் வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. 95 சதவிகித மக்கள் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதே நேரம் ரிலையன்ஸுக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
மும்பை உயர் நீதிமன்றம் இந்த சிறப்புப் பொருளாதார மண்டல நில ஆர்ஜிதத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதனை எதிர்த்து ரிலையன்ஸ் தாக்கல் செய்த அப்பீல் மனுவை ஏற்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி, தடை நீடிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கை மும்பை நீதிமன்றத்துக்கு மார்றக் கோரி ரிலையன்ஸ் தொடர்ந்துள்ள மற்றொரு வழக்கு குறித்து மகாராஷ்ட்ர அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
முன்னதாக ரிலையன்ஸுக்காக உச்ச நீதிமன்றத்தில ஆஜரான வழக்கறிஞர் சாந்திபூஷண், குறித்த காலத்துக்குள் நில ஆர்ஜிதம் முடிக்கப்படாவிட்டால், 1894-ம் ஆண்டு நில ஆர்ஜித சட்டப்படி, மொத்த நடவடிக்கையும் தகுதியிழப்புக்கு உள்ளாகிவிடும் என்று வாதிட்டார்.












Click it and Unblock the Notifications