புதுச்சேரி ஆளுநராகிறார் பரத்வாஜ்?
டெல்லி: புதுச்சேரி மாநில ஆளுநராக முன்னாள் சட்ட அமைச்சர் பரத்வாஜ் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
சமீபத்தில் பதவியேற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் மூத்த தலைவர்களான அர்ஜூன் சிங், பரத்வாஜ் உள்ளிட்டோருக்கு அமைச்சர் பதவிகள் தரப்படவில்லை.
இதனால் இவர்களுக்கு கவர்னர் பதவிகள் தரப்படும் என்று கூறப்படுகிறது.
முதல்கட்டமாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பிகார், புதுவை, திரிபுரா மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுவை துணை நிலை ஆளுநராக இருந்த கோவிந்சிங் குர்ஜார் தனது சொந்த மாநிலமான ராஜஸ்தான் சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு அங்கேயே மரணமடைந்தார். இதனால் புதுவை மாநில கவர்னர் பொறுப்பை தமிழக ஆளுநர் பர்னாலா தான் கூடுதலாக கவனித்து வருகிறார்.
இந் நிலையில் புதுவை ஆளுநராக முன்னாள் சட்ட அமைச்சரான பரத்வாஜ் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.
அதே போல மத்திய உள்துறைச் செயலாளராக உள்ள மதுக்கர் குப்தாவின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. அவர் திரிபுரா மாநில ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மூத்த தலைவர்களான அர்ஜூன் சிங், சிவராஜ் பட்டீல் ஆகியோருக்கு பெரிய மாநிலங்களின் கவர்னர் பதவிகள் தரப்படலாம். தமிழக ஆளுநராக உள்ள பர்னாலாவின் பதவி்க் காலமும் விரைவில் முடிவதால் சிஸ்ராம் ஓலா அந்தப் பதவியில் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்காள ஆளுநராக உள்ல கோபாலகிருஷ்ண காந்தியின் பதவிக் காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால், அவருக்கு பதவி நீடிப்பு கொடுக்க ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி சிபாரிசு செய்து வருகிறார்.
-
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications