அகதிகள் முகாம்களில் 13,000 தமிழர்கள் மாயம்: படுகொலையானார்களா?
கொழும்பு: வன்னிப் பகுதியில் உள்ள இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் தங்கியிருந்த 13 ஆயிரம் தமிழர்களைக் காணவில்லை என ஐ.நா. வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐ.நா. சபையின் மனிதாபிமான விவகாரப் பிரிவு ஒருங்கிணைப்பு அலுவலகம், இந்த காணாமல் போன தமிழர்கள் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பில் உள்ள ஐ.நா. வட்டாரத் தகவல்கள் கூறுகையில், 13 ஆயிரம் தமிழர்கள் காணாமல் போயிருப்பது குறித்து சிங்கள அதிகாரிகள் மறைத்து வருகிறார்கள்.
காணாமல் போயுள்ளவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள், சிறார்கள்தான். கணிசமானவர்கள் பெண்களும் ஆவர்.
மே 30ம் தேதிய நிலவரப்படி 2 லட்சத்து 76 ஆயிரத்து 785 தமிழ் மக்கள் அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளனர். இவர்களில் 13,130 பேரை தற்போது காணவில்லை. மே 27ம் தேதியன்றுதான் இதுகுறித்து தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் விசாரணை என்ற பெயரில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தவர்கள். விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இவர்களை ராணுவம் கொன்றிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஏற்கனவே இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள இளைஞர்களையும், இளம் பெண்களையும் ராணுவம் விசாரணை என்ற பெயரில் கற்பழிப்புக்குள்ளாக்கியும், தொடர் சித்திரவதைக்குள்ளாக்கியும் வருவதாக புகார்கள் உள்ளன.
ஐ.நா. குழுக்களுக்கோ, பிற மனித உரிமை குழுக்களுக்கோ முகாம்களைப் பார்வையிட விடாமல் இலங்கை அரசு தடுத்து வருகிறது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இரும்புத் திரை போட்டுத் தடுத்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications