சென்னை தீம் பார்க்கில் ரயில் மோதி பெண் பலி
சென்னை: சென்னை அருகே பூ்நதமல்லியில் உள்ள குயீன்ஸ்லான்ட் பொழுது போக்குப் பூங்காவில் சிறார்கள் உல்லாச பயணம் மேற்கொள்ளும் பொம்மை ரயில் மோதி அங்கு பணியாற்றி வந்த 50 வயதுப் பெண் பலியானார்.
பூந்தமல்லி அருகே பாப்பாஞ்சத்திரம் என்ற இடத்தில் குயீன்ஸ்லான்ட் பொழுது போக்கு பூங்கா உள்ளது. இங்கு ஞானமணி என்ற 50 வயதுப் பெண் தோட்டப் பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
அவர் பணியில் இருந்தபோது சிறார்கள் பயணம் செய்யும் உல்லாச ரயில் ஞானமணி மீது மோதி விட்டது. இதில் ரயில் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட ஞானமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் ஞானமணியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
ரயிலை ஓட்டிய டிரைவர் சேகர் மற்றும் குணசீலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே பொழுதுபோக்குப் பூங்காவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படகு சவாரியின்போது மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
இந்த நிலையில் ரயில் மோதி ஒரு பெண் பலியாகியுள்ளார்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications