ஸ்ரீபெரும்புதூர்: பஸ்-லாரி மோதலி 4 பேர் பலி
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று பஸ், லாரி நேருக்கு நேர் மோதி கொண்ட கோர விபத்தில் 4 பேர் பலியானார்கள்.
சென்னையில் இருந்து வந்தவாசி நோக்கி நேற்று மதியம் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சுமார் 2.20 மணிக்கு வண்டி ஸ்ரீபெரும்புதூர் அருகே வி.ஆர்.பி.சத்திரம் சென்று கொண்டிருந்த போது பஸ் டிரைவர் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ், லாரியின் வலது பக்கத்தில் பலமாக மோதியது. இதையடுத்து பஸ்சின் இடதுபாகம் முற்றிலுமாக சேதமைடந்து சுக்கு நூறாக நொறுங்கி போனது.
இதில் பஸ்சின் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த என்ஜினியரிங் மாணவர் மோகன்ராஜ்(24), காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார்(21) மற்றும் அடையாளம் தெரியாத சுமார் 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் சம்பவ இடத்திலே பலியாயினர்.
படுகாயமடைந்த 13 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications