ஆஸி.யில் மீண்டும் இந்திய மாணவர் மீது தாக்குதல்
மெல்போர்ன்: இனி இனவெறித் தாக்குதல் நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று ஆஸ்திரேலிய அரசு உறுதி அளித்தும் கூட இந்தியர்கள் மீதான தாக்குதல் மெல்போர்ன் நகரில் தலைவிரித்தாடுகிறது,. நேற்று மேலும் ஒரு இந்திய மாணவர் தாக்கப்பட்டார்.
கடந்த ஒரு மாதத்தில் இனவெறியர்களால் தாக்கப்பட்ட 10வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானாவைச் சேர்ந்தவர் அம்ரித் பால் சிங் (20). மெல்போர்ன் நகரில் உள்ள கேப்ஸ் நிர்வாகவியல் கழகத்தில், படித்துக் கொண்டிருக்கிறார்.
நேற்று மெக்டொனால்ட் உணவகப் பகுதியில் தான் பகுதி நேரமாக வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு அவர் போய்க் கொண்டிருந்தார்.
அதன் பிறகு நடந்தது குறித்து சிங் கூறுகையில், நான் நடந்து போய்க் கொண்டிருந்தபோது திடீரென ஒரு கும்பல் என்னை வழிமறித்தது. அவர்களில் ஒருவன் எனது மொபைல் போனை பறித்துக் கொண்டான். அதை என்னிடம் தருமாறு நான் கோரியபோது, எனது முகத்தை அவன் குத்திவிட்டான்.
கோபமடைந்த நான் பதிலுக்கு அவனது முகத்தில் குத்தினேன். இதையடுத்து அவனுடன் இருந்த நான்கு பேரும் சேர்ந்து என்னை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
அவர்களில் ஒருவன் தனது கத்தியால் என்னைக் குத்த முயன்றான். நான் சுதாரித்து விலகியதால் நான் வைத்திருந்த பேக்கில் கத்தி பட்டது. நான் தப்பித்தேன். பின்னர் அக்கும்பல் ஓடி விட்டது.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளேன் என்றார் சிங்.
இதுவரை பத்து இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடந்துள்ளதால் இந்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இவர்களில் கடுமையாக தாக்கப்பட்டதால் படுகாயமடைந்த ஷ்ராவன் குமார் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications