For Daily Alerts
Just In
டாடா ஸ்டீல் நிறுவன மே மாத விற்பனை 18% உயர்வு
மே மாதத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் விற்பனை அளவு 4.69 லட்சம் டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 3.97 டன்களாக இருந்தது.
ஆட்டோ மற்றும் கட்டுமானத் துறைகளில் தேவை அதிகரித்துள்ளதால் இந்த விற்பனை உயர்வு காணப்பட்டதாக டாடா ஸ்டீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு மே மாதத்தில் நிறுவனத்தின் விற்பனைக்குரிய இரும்பு உற்பத்தி 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதன் விற்பனைக்குரிய இரும்பு உற்பத்தி 5.01 லட்சம் டன்களாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 4.08 லட்சம் டன்களாக இருந்தது என டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.
Comments
Story first published: Sunday, June 7, 2009, 13:51 [IST]