கொலை வழக்கில் கைதான தேசியவாத காங். எம்.பி.க்கு சிபிஐ காவல்
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பவன் ராஜே நிம்பல்கர் கொலை வழக்கில் கைது செய்யபப்பட்ட தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மகாராஷ்டிர உள்துறை அமைச்சருமான பதம்சிங் பாட்டீல் ஜூன் 14ம் தேதி வரை சிபிஐ காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பவன் ராஜே நிம்பல்கர், கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி கலம்போலி என்ற இடத்தில், இரண்டு பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நிம்பல்கரின் உறவினரான பாட்டீலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
உஸ்மானாபாத் தொகுதியைச் சேர்ந்த தேசியவாத காங் எம்.பி ஆவார் பாட்டீல்.
கைது செய்யப்பட்ட பாட்டீல் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை தங்களது காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி கோரினர். அதை விசாரித்த நீதிபதி ஜூன் 14ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து பாட்டீலை விசாரிக்க அனுமதி அளித்தனர். இதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த வாரம்தான் இந்த கொலை வழக்கு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது, நிம்பல்கர் தவிர, மாக்சேசே விருது பெற்ற பிரபல சமூக சேவகரான அன்னா ஹசாரேவையும் கொல்ல தங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் போராட்டம் வெடித்தது...
பாட்டீல் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.
பல பகுதிகளில் கடைகளை மூடக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தியதால் கடைகள் மூடப்பட்டன. சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களால் பல இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சட்டம் கடமையைச் செய்யும் .. பவார்
இதற்கிடையே பாட்டீல் கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சட்டம் தனது கடமையைச் செய்யும் என்று கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications